சினிமா செய்திகள்

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் + "||" + Fans sculpted for Vijay

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்க்கு தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது படங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் வசூல் குவிக்கின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ரசிகர்கள் விஜய்யின் முழு உருவ வெண்கல சிலையை வடிவமைத்து உள்ளனர். அந்த சிலையை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு விஜய் சிலையை நிறுவினார்கள். சிலைக்கு ரசிகர்கள் மாலையும் அணிவித்தனர். விஜய்யின் உருவச்சிலை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பீஸ்ட் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.