சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு + "||" + AR Rahman composed Mimi film was released on OTT before it was leaked Online

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு
தியேட்டரில் வெளியாகும் படங்களை முதல் நாளே திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளங்களில் வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல கட்ட முயற்சி எடுத்தும் தடுக்க முடியவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும், உடனுக்குடன் திருட்டு இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த மோசடிகளை மிஞ்சும் வகையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே ‘மிமி' என்ற இந்தி படம் முழுவதுமாக திருட்டு இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்துள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பங்கஜ் திரிபாதி, கிரிதி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமண் உடேகர் இயக்கி உள்ளார். வருகிற 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி உடனடியாக ஓ.டி.டி.யில் படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் பட அனுபவம் குறித்து மனந்திறந்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்
ரஜினிகாந்த் நடித்த முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட பல படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
2. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் கொரோனா நிதியாக ரூ.37 கோடி திரண்டது
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவுவதற்காக ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட காணொலி காட்சி இசை நிகழ்ச்சி மூலம் ரூ.37 கோடி திரண்டுள்ளது.