ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பில் இயக்குனர் சேரன் காயம்


ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பில் இயக்குனர் சேரன் காயம்
x
தினத்தந்தி 5 Aug 2021 7:49 AM GMT (Updated: 2021-08-05T13:19:28+05:30)

இயக்குனர் சேரன், ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்தார்.

சென்னை

இயக்குநர் சேரன், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஶ்ரீ வாரி பிலிம் சார்பாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர், நடிகை ஜீவிதா- டாக்டர் ராஜசேகர் தம்பதியின் மகள். 

மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சினேகன், நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் சேரன், கால் தடுமாறி விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்தும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

Next Story