பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு


பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Aug 2021 12:15 AM GMT (Updated: 2021-08-09T05:45:11+05:30)

பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே, ஹவுஸ்புல் 3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே, ஹவுஸ்புல் 3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரசாந்தின் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் ஏற்கனவே ‘மீ டூ’வில் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நர்கீஸ் பக்ரியும் தற்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, ‘எனக்கும் தொல்லைகள் இருந்தன. பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்களுடன் படுக்கையை பகிர உடன்படவில்லை. கட்டுப்பாடுகளுடன் இருந்தேன். இதனால் பல சினிமா பட வாய்ப்புகளை இழந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.. இது என்னை காயப்படுத்தியது. நான் புகழுக்காக ஏங்கவில்லை. விளம்பரத்தில் சில காட்சிகளில் நிர்வாணமாக நடிக்கும்படி வற்புறுத்தினர். அதற்கும் நான் சம்மதிக்கவில்லை'' என்றார்.

Next Story