வைரலாகும் புகைப்படம் கை விலங்குடன் ஹன்சிகா தோற்றம்


வைரலாகும் புகைப்படம் கை விலங்குடன் ஹன்சிகா தோற்றம்
x
தினத்தந்தி 12 Aug 2021 11:29 AM GMT (Updated: 2021-08-12T16:59:49+05:30)

வளர்ந்த கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க தொடங்கி உள்ளனர்.

வளர்ந்த கதாநாயகிகள் பலரும் கதாநாயகனை காதல் செய்து நடிக்கும் கதாபாத்திரங்களை தவிர்த்து தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க தொடங்கி உள்ளனர். ஹன்சிகாவும் அதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறார்.

ஏற்கனவே அவர் நடித்து வரும் மஹா வித்தியாசமான கதை. இந்த படத்தில் ஹன்சிகாவின் தோற்றங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இதுபோல் 105 நிமிடம் என்ற திகில் படத்தில் தற்போது நடித்து வருகிறார். ராஜா துஸ்ஸா இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தை இடைவிடாமல் ஒரே ஷாட்டில் எடுப்பது விசேஷம். அதோடு ஹன்சிகா மட்டுமே நடிக்கிறார். வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை. 105 நிமிடம் படத்தின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் உடலில் ரத்த காயங்களோடு கைவிலங்குடன் ஹன்சிகா இருக்கிறார். இந்த தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் ‘மை நேம் ஈஸ் சுருதி’ என்ற இன்னொரு தெலுங்கு படத்திலும் ஹன்சிகா நடித்து வருகிறார்.

Next Story