விக்ரமின் 3 படங்கள்


விக்ரமின் 3 படங்கள்
x
தினத்தந்தி 16 Aug 2021 8:18 AM GMT (Updated: 2021-08-16T13:48:17+05:30)

நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 60-வது படத்தில் நடித்து முடித்து விட்டார். இதில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். படத்தில் இருவரும் தந்தை, மகனாகவே நடிப்பதாக தகவல். சிம்ரன், வாணிபோஜன் கதாநாயகிகளாக வருகிறார்கள். படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கி கொல்கத்தாவில் முடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கோப்ரா படத்தில் விடுபட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இதன் படவேலைகள் அடுத்த சில தினங்களில் முடிவடைய உள்ளது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

Next Story