இணைய தளத்தில் 2 நடிகர்களின் படக் காட்சிகள் கசிந்தன


இணைய தளத்தில் 2 நடிகர்களின் படக் காட்சிகள் கசிந்தன
x
தினத்தந்தி 17 Aug 2021 4:08 AM GMT (Updated: 2021-08-17T09:38:36+05:30)

இணைய தளத்தில் 2 நடிகர்களின் படக் காட்சிகள் கசிந்தன.

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் மகேஷ்பாபு சர்காரி வாரி பாட்டா படத்திலும், அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார்கள். மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேசும், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர்.

தெலுங்கில் தயாராகும் இந்த இரண்டு படங்களையும் தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். ரூ.250 கோடி செலவில் தயாராகும் புஷ்பா படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் சர்காரி வாரி பாட்டா படத்தின் டிரெய்லரும், புஷ்பா படத்தின் பாடலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னரே திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரண்டு படங்களை தயாரிக்கும் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சர்காரி வாரி பாட்டா’, புஷ்பா பட காட்சிகளை சில சமூக விரோதிகள் கசியவிட்டது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருடர்கள் சிக்குவார்கள்'' என்று கூறியுள்ளது.


Next Story