வைரலாகும் புகைப்படம் மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா


வைரலாகும் புகைப்படம் மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா
x
தினத்தந்தி 18 Aug 2021 3:35 AM GMT (Updated: 2021-08-18T09:05:31+05:30)

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக இளைஞர்களுக்கு பிடித்த நடிகையாகவும் மாறி இருக்கிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் 2 கோடி பேரை பெற்று முதல் இடம் பிடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா சேலை அணிந்து தலையில் மல்லிகைப்பூ கிரீடம் சூட்டிய புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ராஷ்மிகா அழகாக இருப்பதாக பாராட்டிய ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Next Story