சர்ச்சை வீடியோ விவகாரம்: நடிகைகள் கண்டனம்


சர்ச்சை வீடியோ விவகாரம்: நடிகைகள் கண்டனம்
x
தினத்தந்தி 25 Aug 2021 7:02 PM GMT (Updated: 2021-08-26T00:32:46+05:30)

தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு நடிகைகளும், பா.ஜனதா பிரமுகர்களுமான குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு தமிழக பா.ஜனதா கட்சியிலும், தேசிய பா.ஜனதா கட்சியிலும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. நடந்துள்ள இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். இதற்காக பா.ஜனதாவில் பெண்கள் மதிக்கப்படுவது இல்லை என்று ஒட்டுமொத்த கட்சியையும் குற்றம் சாட்டுவது வேதனை அளிக்கிறது’’ என்றார்.

நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டம் அனைவருக்கும் சமமானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினால் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்'' என்று தெரிவித்து உள்ளார்.

Next Story