சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கார், உடைமைகளுடன் திருட்டு + "||" + Famous Hollywood actor Tom Cruise's car, theft with possessions

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கார், உடைமைகளுடன் திருட்டு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கார், உடைமைகளுடன் திருட்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது இம்பாஷிபிள் படத்தின் 7-வது பாகத்தில் நடித்து வருகிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது இம்பாஷிபிள் படத்தின் 7-வது பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் இங்கிலாந்தில் முகாமிட்டு உள்ளார். அங்குள்ள பிர்மிங்காம் நகரில் டாம் குரூசின் கார், உடைமைகளோடு திருட்டு போய் விட்டது. இதனால் டாம் குரூஸ் அதிர்ச்சி அடைந்தார்.


ஆனால் காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருந்ததால் போலீசார் தீவிரமாக தேடி தற்போது கண்டுபிடித்து மீட்டுள்ளனர். ஆனாலும் காருக்குள் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தன. இந்த காருக்கு சாவி இல்லை என்றாலும் திருடர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கார் கதவை திறந்து ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “பிர்மிங்காம் சர்ச் தெருவில் இருந்து பி.எம்.டபிஸ்யூ. எக்ஸ் 7 ரக கார் திருடப்பட்டு உள்ளது என்று எங்களுக்கு புகார் வந்த சில மணி நேரத்தில் சம்த்விக் பகுதியில் அந்த கார் மீட்கப்பட்டது. திருடர்களை பிடிக்க சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு
நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது காணாமல் போனது.
2. கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் துணிகள் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் துணிகள் திருட்டு.
4. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.