பிரபல டைரக்டரின் பெயரில் ஆபாச அழைப்பு நடிகை புகார்


பிரபல டைரக்டரின்  பெயரில் ஆபாச அழைப்பு நடிகை புகார்
x
தினத்தந்தி 30 Aug 2021 12:37 PM GMT (Updated: 2021-08-30T18:07:27+05:30)

பிரபல டைரக்டரின் பெயரில் தனக்கு ஆபாச அழைப்பு வந்ததாக நடிகை ஒருவர் புகார் கூறி உள்ளார்.

கொல்கத்தா

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார். பல்வேறு வங்கமொழி படங்களில் நடித்துள்ள இவர், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.  பாயல்கடந்த வருடம் பா.ஜ.கவில் இணைந்தார் இந்தநிலையில் பிரபல வங்கமொழி டைரக்டர்  ரவி கினாகியுடன் பேஸ்புக் மூலம் உரையாடி உள்ளார்.

அதில், தான் அடுத்து இயக்கும் படத்தில் தங்களை நாயகியாக தேர்வு செய்திருக்கி றேன் என்று அவர் கூறியுள்ளார். நன்றி என்று தெரிவித்த நடிகை தொடர்ந்து அவருடன் உரையாடி உள்ளார்.

திடீரென்று அவருக்கு, டைரக்டரிடம்   இருந்து ஆபாச தகவ்ல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த விஷயத்தை அப்படியே தனது பேச்புக் பக்கத்தில் பதிவு செய்தார். சிலர் டைரக்டரின்  கணக்கை பாருங்கள், அது போலியாக இருக்கப் போகிறது என்று தெரிவித்திருந்தனர். அதன்படி நடிகை பார்த்தபோது, அது டைரக்டரின் பெயரில் உள்ள போலி கணக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை பாயல் சர்க்கார் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கணக்கை முடக்கியுள்ளனர்.

இந்நிலையில் டைரக்டர் ரவி கினாகி கூறும்போது, என்னை தொடர்புகொள்ள நினைத்தால் போன், அல்லது அலுவலகத்தில் பார்க்கலாம். சமூக வலைதளங்கள் மூலம் யாரையும் நடிப்புக்காக அணுகுவதில்லை. என் பெயரில் போலி கணக்குகள் உள்ளன. இதுபோன்ற செயல்களால் எங்களைப் போன்றவர்களுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது என கூறினார்.

Next Story