சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் குதிரை பலி மணிரத்னம் மீது வழக்குப்பதிவு + "||" + Case filed against Mani Ratnam for killing a horse during the shooting

படப்பிடிப்பில் குதிரை பலி மணிரத்னம் மீது வழக்குப்பதிவு

படப்பிடிப்பில் குதிரை பலி மணிரத்னம் மீது வழக்குப்பதிவு
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. வட மாநிலங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, ஜெயராம், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. சரித்திர காலத்து படம் என்பதால் 80 குதிரைகளை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு குதிரைகளை வேனில் ஏற்றி படப்பிடிப்புக்கு கொண்டு சென்றபொது போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். பின்னர் குதிரைகளை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ள கடிதத்தை படக்குழுவினர் போலீசாரிடம் காட்டி மீட்டு சென்றார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஒரு குதிரை பலியாகி விட்டது. இதையடுத்து ஐதராபாத் அப்துல்லாபுட் போலீசார் மணிரத்னம் மற்றும் குதிரைகளின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விலங்குகள் நல வாரியமும் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டருக்கும், தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு.
2. ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் மனு
ராகுல்காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.68 கோடி சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.68 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கடத்தல், நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
கடத்தல், நில அபகரிப்பு செய்ததாக பரம்பீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. சமூகவலை தளங்களில் பரவிய வீடியோ காட்சி: போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி பெண் ஒருவர் சண்டை போடும் காட்சி நேற்று சமூகவலை தளங்களில் பரவியது. அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.