வில்லன் நடிகர் திருமண நிச்சயதார்த்தம்


வில்லன் நடிகர் திருமண நிச்சயதார்த்தம்
x
தினத்தந்தி 7 Sep 2021 6:34 AM GMT (Updated: 2021-09-07T12:04:21+05:30)

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால்.

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். வித்யூத் ஜம்வாலுக்கும், ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காதலியுடன் வித்யூத் ஜம்வால் தாஜ்மகாலுக்கு சென்றுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகிறது.

அந்த புகைப்படத்தில் நந்திதா கை விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருக்கிறார். நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்து விட்டார். வித்யூத் ஜம்வாலும் இந்தி நடிகை மோனா சிங்குடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்.

Next Story