தியேட்டர்களை திறக்காத அரசை சாடிய கங்கனா


தியேட்டர்களை திறக்காத அரசை சாடிய கங்கனா
x
தினத்தந்தி 8 Sep 2021 6:05 PM GMT (Updated: 8 Sep 2021 6:05 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். தலைவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தியேட்டர்களில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கவில்லை. இந்தி படங்கள் மராட்டியத்தில்தான் அதிக வசூல் குவிக்கின்றன. அங்கு தியேட்டர்கள் திறக்கப்படாததால் தலைவி படத்தின் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மராட்டியத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. எனவே அங்கு தியேட்டர்களை திறந்து, சாகும் நிலையில் இருக்கும் திரைப்படத்துறையையும், திரையரங்கு வியாபாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மராட்டியத்தில் ஓட்டல்கள், அலுவலகங்கள், உள்ளூர் ரெயில்கள் செயல்படுகின்றன. ஆனால் தியேட்டர்களை மட்டும் மூடி உள்ளனர். மராட்டிய அரசு கொரோனா தொற்று தியேட்டர்களில் மட்டுமே பரவுவதாக நினைக்கிறதோ'' என்று சாடி உள்ளார்.

Next Story