சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 5 படங்கள் + "||" + 5 films starring Kamal

கமல் நடிக்கும் 5 படங்கள்

கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பாதியில் நின்றுபோன இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 படப்பிடிப்பிலும் பங்கேற்க இருக்கிறார். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு தேவர் மகன் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குவார் என்று தெரிகிறது. இதில் விக்ரம், விஜய்சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாபநாசம் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதும் பரிசீலனையில் உள்ளது.


இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருக்கிறார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் படத்தில் கமல் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
2. ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன.
3. இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்
இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்.
4. விக்ரமின் 3 படங்கள்
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
5. நயன்தாராவின் 3 புதிய படங்கள்
நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தொடர்ந்து நிழல் மலையாள படம் வந்தது.