சினிமா செய்திகள்

‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல் + "||" + "Can I act in 135 films if I am the wrong person?" - Actor Karthik Kumural

‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்

‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்
‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்.
கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘தீ இவன்’ படத்தை ஜெயமுருகன் டைரக்டு செய்து வருகிறார். கார்த்திக் என்றாலே படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற சர்ச்சையை பொய்யாக்கி, மிக குறுகிய நாட்களில், ‘தீ இவன்’ படத்தில் அவர் நடித்து முடித்து இருக்கிறார்.


இதுபற்றி டைரக்டர் ஜெயமுருகன் கூறியதாவது:-

‘‘கார்த்திக்கை வைத்து ‘தீ இவன்’ படத்தை ஆரம்பித்தபோது, திரையுலகை சேர்ந்த பலர் என்னை பயமுறுத்தினார்கள். உங்களுக்கு வேறு ‘ஹீரோ’ கிடைக்கவில்லையா’’ என்று கிண்டல் செய்தார்கள். அவர்கள் பயமுறுத்தியதால் நானும் பயந்தபடியே திருப்பூரில் படப்பிடிப்பை தொடங்கினேன்.

கார்த்திக் என் படத்துக்கு 20 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார். சொன்னபடி, அவர் எந்த பிரச்சினையும் செய்யாமல், இருபது நாட்களில் நடித்து முடித்து விட்டார்.

இடையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்குப்போய் சிகிச்சை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். அவரால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுபற்றி அவரிடமே கேட்டேன். அவர் சொன்ன பதில் என்னை நெகிழவைத்தது.

‘‘என்னிடம் சரியாக இருப்பவர்களிடம் நான் சரியாக இருப்பேன். தவறானவர்களிடம் தவறாக இருப்பேன். நான் தவறான ஆளாக இருந்தால், 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ என்று கார்த்திக் கேட்டார். என் அனுபவத்தில் அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல நடிகர். அவருக்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார்.’’

தொடர்புடைய செய்திகள்

1. படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் - நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
2. நடிகர் சித்தார்த் காட்டம்
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
3. கார் மோதி பிரபல நடிகர் காயம்
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
4. அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்.
5. சமந்தா பட நடிகர் கைது
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.