சூர்யாவின்'ஜெய் பீம்'திரைப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் !


சூர்யாவின்ஜெய் பீம்திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் !
x
தினத்தந்தி 6 Oct 2021 11:00 AM GMT (Updated: 2021-10-06T16:30:49+05:30)

நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னை 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் டி.ஜே.  ஞானவேல்  இயக்கத்தில்  உருவாகியுள்ள  படம் ’ஜெய் பீம்’ . ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் . இந்த படத்தை  சூர்யாவின்  2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது .. 

இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக  நடித்திருக்கிறார் .சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர்  சூர்யாவின்  'ஜெய் பீம்'  திரைப்படத்திற்கு சென்சாரில் ' ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும்   படத்தின் ரன்னிங் டைம்  (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

 வருகிற நவம்பர் 2ம் தேதி இந்த திரைப்படம்   அமேசான் பிரைமில்  வெளியாகும் என படக்குழு   ஏற்கனவே அறிவித்துள்ளது.

Next Story