ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பு முடிவடைந்தது


ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘ரஜினி’ படப்பிடிப்பு முடிவடைந்தது
x
தினத்தந்தி 8 Oct 2021 4:43 PM GMT (Updated: 2021-10-08T22:13:39+05:30)

‘மகாபிரபு’, ‘சாக்லெட்,’ ‘ஏய்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஏ.வெங்கடேஷ், தனது புதிய படத்துக்கு ‘ரஜினி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

‘மகாபிரபு’, ‘சாக்லெட்,’ ‘ஏய்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஏ.வெங்கடேஷ், தனது புதிய படத்துக்கு ‘ரஜினி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். வி.பழனிவேல் தயாரித்து வரும் இந்தப் படத்தில், விஜய் சத்யா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். படத்துக்காக 6 பேக் உடற்கட்டுக்கு மாறியிருக்கிறார். கதாநாயகி, செரீன். அம்ரிஸ் இசையமைத்துள்ளார்.

‘ரஜினி’ பற்றி டைரக்டர் ஏ.வெங்கடேஷ் கூறுகிறார்:-

‘‘இது அதிரடி சண்டை மற்றும் திகில் கலந்த படம். ஜனரஞ்சகமான கதை. கதாநாயகன் விஜய் சத்யா எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பது திரைக்கதை. கதாநாயகனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடித்துள்ளது. அது வரும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.’’

Next Story