சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியானது + "||" + Udayanithi Stalin's 'Nenjukku Neethi' motion poster released

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியானது

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியானது
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
சென்னை,

கனா திரைப்படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கில் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதுகுறித்து படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜ், ஆர்ட்டிக்கில் 15 திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய திரைக்கதை எழுதி இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக கூறினார்.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். திபு நினன் தாமஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

நெஞ்சுக்கு நீதி படத்தின் 2 கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்து விட்டதாகவும் 3ம் கட்ட படப்பிடிப்பு விரைவி்ல பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரில் நடக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படத்தில் வடிவேலு
நடிகர் உதயநிதி ஸ்டாலின் -மாரி செல்வராஜ் இணையும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பில் ஒரு நபருக்கு 2 கிலோ இலவச தக்காளி வழங்கப்பட்டது.
3. அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்
2 நாள் சுற்றுப்பயணமாக உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.
5. பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.