சினிமா செய்திகள்

நடிகை தமன்னா வழக்கு + "||" + Tamannaah to take legal action against MasterChef Telugu for unprofessional behaviour

நடிகை தமன்னா வழக்கு

நடிகை தமன்னா வழக்கு
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள தமன்னாவை சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தமன்னாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இன்னொரு பெண் தொகுப்பாளரை நியமித்தனர். இது தமன்னாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமன்னா மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். 

இதுகுறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு தரப்பின் ஒழுக்கமற்ற செயலினாலும் தமன்னா வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார். தமன்னாவுடனான தொடர்புகளை உடனடியாக அவர்கள் துண்டித்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை முழுமையாக முடித்து கொடுக்க ஏற்கனவே முடிவான சில ஒப்பந்தங்களை தமன்னா ரத்து செய்தார். ஆனால் திடீரென்று அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் அவர்கள் மீது தமன்னா வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.