மலை முகட்டில் நடிகர் அஜித்...! - வைரலாகும் புகைப்படம்


மலை முகட்டில் நடிகர் அஜித்...! - வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 27 Oct 2021 6:06 PM IST (Updated: 27 Oct 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். தற்போது போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை திரைப்படத்தில் ஏற்கனவே டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கினார். இதையடுத்து வடஇந்தியவில் பயணத்தை தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

தற்போது அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது.  உயரமான மலையின் பாறை முகட்டில் நின்று அஜித் எடுத்திருக்கும் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை லயன் கிங் படத்தில் பாறை உச்சியில் நிற்கும் சிம்மா சிங்கத்துடன் இணைத்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

1 More update

Next Story