'எப்.ஐ.ஆர்' வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் - விஷ்ணு விஷால்


எப்.ஐ.ஆர்  வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் - விஷ்ணு விஷால்
x
தினத்தந்தி 31 Oct 2021 8:18 AM GMT (Updated: 2021-10-31T13:48:32+05:30)

‘எப்.ஐ.ஆர்’ படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டைரக்டர் கவுதம் மேனன்  நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. 

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'எப்.ஐ.ஆர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்பது தவறான செய்தியாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கவும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story