புனித் ராஜ்குமாருடன் எடுத்த செல்பி படம் - டுவிட்டரில் பகிர்ந்த ராகவேந்திர ராஜ்குமார்


புனித் ராஜ்குமாருடன் எடுத்த செல்பி படம் - டுவிட்டரில் பகிர்ந்த ராகவேந்திர ராஜ்குமார்
x
தினத்தந்தி 2 Nov 2021 8:27 PM GMT (Updated: 2021-11-03T01:57:51+05:30)

புனித் ராஜ்குமாருடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது அண்ணன் ராகவேந்திரா ராஜ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு,

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் கர்நாடக மக்களையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் இறுதியாக தன்னுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை அவரது அண்ணன் ராகவேந்திரா ராஜ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் செல்பி எடுப்பதற்கு முன், எம்.எஸ்.கே.அறக்கட்டளை சார்பில் தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டதற்கு புனித் ராஜ்குமார் மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், டாக்டர் ராஜ்குமார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் விருதுகள் அனைத்தும் இதே மாதிரியில் வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்று ராகவேந்திர ராஜ்குமார் பதிவிட்டுள்ளார். இது காண்போரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story