சினிமா செய்திகள்

விஜய்-சூர்யா திடீர் சந்திப்பு ...! என்ன பேசிக்கொண்டனர்...! + "||" + Vijay-Surya sudden meeting ...! What were they talking about ...!

விஜய்-சூர்யா திடீர் சந்திப்பு ...! என்ன பேசிக்கொண்டனர்...!

விஜய்-சூர்யா திடீர் சந்திப்பு ...!  என்ன பேசிக்கொண்டனர்...!
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் சமீபத்திய திடீர் சந்திப்பு தான் தற்போதைய முக்கிய செய்தியாக உள்ளது.
சென்னை,

நடிகர் விஜய், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்டோர்  நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில்  படப்பிடிப்பு இடைவேளையின் போது  விஜய்யும் சூர்யாவும் சந்தித்துள்ளனர். அப்போது ஜெய் பீம் திரைப்படம் குறித்து சூர்யாவிடம் விஜய் பேசியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.தொடர்புடைய செய்திகள்

1. கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
2. விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு... காரணம் தெரியுமா?
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
5. வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.