‘கின்னஸ்’ சாதனை படைத்த டைரக்டரின் இன்னொரு சாதனை


‘கின்னஸ்’ சாதனை படைத்த டைரக்டரின் இன்னொரு சாதனை
x
தினத்தந்தி 12 Nov 2021 12:51 PM GMT (Updated: 12 Nov 2021 12:51 PM GMT)

உலக சினிமாவில், முதல்முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம், ‘181.’

2 மணி நேரம் 3 நிமிடம் 30 வினாடிகள் ஒரே ஷாட்டில், ‘அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து, கின்னஸ் உலக சாதனை புரிந்த டைரக்டர், இசாக். இவர் இதற்கு முன்பு ஆரி அர்ஜூனை வைத்து, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

மீண்டும் புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் ஒரு திரைக்கதையை எழுதி இயக்கியும் இருக்கிறார்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் இசாக் கூறியதாவது:-

‘‘இது முழுக்க முழுக்க பேய் படம் என்றாலும் பெண்களுக்கான படம். பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதையை எழுதியிருக்கிறோம்.

புதுமுகங்கள் ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர்.


Next Story