இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான ‘அண்ணாத்த’..!


இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான ‘அண்ணாத்த’..!
x
தினத்தந்தி 25 Nov 2021 6:29 PM GMT (Updated: 2021-11-25T23:59:32+05:30)

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. விஸ்வாசம் படத்திற்கு பிறகு இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்ற பலர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 4-ந்தேதி தீபாவளியன்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அண்ணாத்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சன் நெக்ஸ்ட், நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் திரையரங்கில் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story