சினிமா செய்திகள்

ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...! + "||" + Myna Nandini breaking the secret of beauty

ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!

ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
சென்னை,

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி  அந்த தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயர் முன்  ‛மைனா' புகழ் ஒட்டிக்கொள்ள மைனா நந்தினியானார். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.  ‛வம்சம்', ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட தமிழ் படங்களில்  நடிகை நந்தினி நடித்துள்ளார்.

நந்தினி, கார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன், சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்து  இருந்தார். 

மைனாவின் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் களங்காத அவர் தொடர்ந்து சினிமா, ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு மைனா திருமணம் செய்து கொண்டார்.

மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார். ’மைனா விங்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவார். அதில் ஒரு வீடியோவில்  நான் எப்படி கலர் ஆனேன்?  அதற்கு தான் எடுத்த முயற்சியை காட்டியுள்ளார்.

ஏபிசி ஜூஸ் என அழைக்கப்படும் ஆப்பிள், பீட்ருட், கேரட்,  ஜூஸ் தான் நந்தினியின் கலர் மாற்றத்திற்கும் காரணமாக இருந்து இருக்கிறது. இதைப் பற்றி சமீப காலமாக பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பேசி வருகின்றனர். இந்நிலையில் நந்தினி அதை எப்படி தயார் செய்கிறார் என்பதை அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதும். கலர் சேஞ்ச் ரிசல்ட் கிடைக்குமாம். இதில் எந்த செயற்கை கலவையும் இல்லாததால் தைரியமாக எல்லோரும் குடிக்கலாம் என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை மீரா ஜாஸ்மின்
இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை மீரா ஜாஸ்மின் தொடங்கி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்
2. ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை
அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.
3. தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிவு : உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் நேற்றும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
4. நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"- ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட்
நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"-என டைரக்டர் ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட் வெளியிட்டு உள்ளார்.
5. ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள்...! நடிகை அப்சரா ராணிக்கு ஏற்பட்ட அனுபவம்...!
சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை அப்சரா ராணி பகிர்ந்துள்ளார்.