சினிமா செய்திகள்

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள் + "||" + Sai Pallavi's conditions to act in new films

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்

புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவியின் நிபந்தனைகள்
தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே படங்களில் நடித்துள்ள சாய்பல்லவிக்கு தெலுங்கு பட உலகிலும் வரவேற்பு உள்ளது. அங்கு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்குவர உள்ளன. சாய்பல்லவியின் நடனத்துக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 


புதிய படங்களில் நடிக்க தனக்குள்ள நிபந்தனைகள் குறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் கதாபாத்திரம் மற்றும் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். கதாபாத்திரம் உண்மையில் என்னோடு தொடர்பு ஆக வேண்டும். கதையிலும், கதாபாத்திரத்திலும் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருக்கிறதா என்பதை பார்த்து பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் இருக்க வேண்டும். கதாபாத்திரம் புதிதாகவும் இருக்க வேண்டும். என்னை நான் சிறந்த டான்சர் என நினைப்பதில்லை. டான்ஸ் நன்றாக ஆட தெரியும். அவ்வளவுதான். டான்ஸ் என்பது எனக்கு சகஜமாகவே வந்த கலை. சந்தோஷமாக இருந்தாலும், வேதனையோடு இருந்தாலும் வீட்டில் அதிக நேரம் டான்ஸ் ஆடுவேன்” என்றார்.