வலிமை படத்தின் 2-வது பாடலுக்கான ப்ரோமோ வெளியீடு


வலிமை படத்தின் 2-வது பாடலுக்கான ப்ரோமோ வெளியீடு
x
தினத்தந்தி 1 Dec 2021 2:35 PM GMT (Updated: 1 Dec 2021 2:35 PM GMT)

வலிமை படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது .

இந்நிலையில்  வலிமை படத்தின் 2-வது பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது .யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் .வரும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு முழு பாடல் வெளியாகிறது
  

Next Story