வாழ்க்கையில் வெல்ல ராஷ்மிகா யோசனை
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாகி உள்ளார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகள் வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘‘எப்போதாவது எரியும் நெருப்பை எதிர் கொண்டு நடந்து சென்று இருக்கிறீர்களா? பயம், தோல்வி உங்களை பயமுறுத்தும் நெருப்பின் வடிவம் இப்படி ஏதாவது இடை மறிக்கலாம். ஆனால் அதையும் தாண்டி செல்லும் முயற்சியை எப்போதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? இரண்டு சூத்திரங்களை அனுசரித்தால் சுலபமாக அதையும் தாண்டி வெற்றி பெறலாம். முதலில் உங்களை தடுக்கும் அந்த தடை என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.
இரண்டாவதாக தினமும் பொறுமையாக அந்த தடைகளை தாண்டி செல்லும் முயற்சியை செய்யுங்கள். எதற்காக நாம் பயப்படுகிறோம் அதை வெற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து அதற்கான முயற்சியை மீண்டும், மீண்டும் செய்யுங்கள்.
ஏதோ ஒரு நாள் அது உங்களை தடுக்க முடியாமல் போய்விடுவதை நீங்களே கவனிப்பீர்கள். அனுபவத்தில் நான் அதை சாதித்தேன். எனவே உங்களுக்கும் சொல்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் இந்த முயற்சியை செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story