சினிமா செய்திகள்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "ராதே ஷியாம் " திரைப்படத்தின் 'தரையோடு தூரிகை' பாடல் வெளியானது..! + "||" + Radhe Shyam: Prabhas and Pooja Hegdes dreamy romance in Aashiqui Aa Gayi will make you believe in love!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "ராதே ஷியாம் " திரைப்படத்தின் 'தரையோடு தூரிகை' பாடல் வெளியானது..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "ராதே ஷியாம் " திரைப்படத்தின் 'தரையோடு தூரிகை' பாடல்  வெளியானது..!
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
ஐதெராபாத் ,

பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் பாடலான  'தரையோடு தூரிகை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'தரையோடு தூரிகை' பாடல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகிறது. யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான காதல் கீதம்
பிரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.