சமந்தா நடனமாடியுள்ள புஷ்பா படத்தின் பாடல்... இணையத்தில் வைரல்


சமந்தா நடனமாடியுள்ள புஷ்பா படத்தின் பாடல்... இணையத்தில் வைரல்
x
தினத்தந்தி 12 Dec 2021 11:41 AM GMT (Updated: 2021-12-12T17:11:06+05:30)

இந்த ஒரு பாடலில் நடிப்பதற்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

ஐதெராபாத், 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவர் தீவிரம் காட்டி வருகிறார். 

இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும்  புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த  ஒரு பாடலில் நடிப்பதற்கு மட்டும் சமந்தா  சுமார் 1.5 கோடி சம்பளம்  வாங்கியதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இப்பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை யூடியூப் தளத்தில் படக்குழு நேற்று வெளியிட்டது. சமந்தாவின் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய இந்த பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வெளியாகிய சில மணி நேரங்களிலே பல லட்சம் பார்வையாளர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.  

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். புஷ்பா படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Next Story