நயன்தாரா, சமந்தா படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்..!


நயன்தாரா, சமந்தா படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்..!
x
தினத்தந்தி 18 Dec 2021 11:22 AM GMT (Updated: 2021-12-18T16:52:50+05:30)

'காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் தாங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங்கை பேசி முடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்ரீசாந்த் இந்திப் படம் ஒன்றி் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் கோப்ரா திரைப்படத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story