வக்கீல் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்


வக்கீல் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 21 Feb 2022 3:49 PM IST (Updated: 21 Feb 2022 3:49 PM IST)
t-max-icont-min-icon

வாஷி படத்தில் கீர்த்தி சுரேஷ் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். அவரது வக்கீல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த நடிகை, சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் அண்ணாத்த, தெலுங்கில் ஜதி ரத்னலு, ராங்க் டே, மலையாளத்தில் அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்கள் வந்தன. தற்போது செல்வராகவனுடன் இணைந்து தமிழில் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா மற்றும் போலா சங்கர், மலையாளத்தில் வாஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சாணி காகிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

 வாஷி படத்தில் கீர்த்தி சுரேஷ் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். அவரது வக்கீல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக வருகிறார். விஷ்ணு ராகவ் இயக்குகிறார்.

1 More update

Next Story