கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் - வித்யா பாலன்


கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் - வித்யா பாலன்
x
தினத்தந்தி 7 April 2022 3:22 PM IST (Updated: 7 April 2022 3:22 PM IST)
t-max-icont-min-icon

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என வித்யா பாலன் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ் சுமிதா வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார்.

வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், “சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வலுவான கதாபாத்திரங்களில் ஆண்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நிறைய ரசிகர்கள் நினைக்கிறார்கள். நான் அதை நம்பவில்லை.

கதை தேர்வில் நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் நடித்தேன் என்னும் திருப்தி எனக்கு உள்ளது. இது சினிமாவுக்கும் நடிகைகளுக்கும் நல்ல காலம். நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருகின்றன. சாதாரண குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் இருந்து அசாதாரணமான கதாபாத்திரங்கள் வரை நடிகைகள் நடிக்காவிட்டால் சினிமா இல்லை. அதனால் தானோ என்னவோ நடிகைகளுக்கான மிகச்சிறந்த கதை கதாபாத்திரங்களை தற்போது கதாசிரியர்கள் எழுதுகிறார்கள்.

கமர்சியல் கதாநாயகர்களுடன் இணைந்து நான் நிச்சயம் நடிக்கவே மாட்டேன். என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்” என்றார்.


Next Story