நிஜத்தில் நண்பர்கள்... திரையில் எதிரிகள்
‘பரியேறும் பெருமாள்’படத்தில் நடித்த கதிர்,குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் இருவரும் நிஜவாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். திரையில் எதிரிகளாக நடிக்கிறார்கள்.
‘பரியேறும் பெருமாள்’படத்தில் நடித்த கதிர், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஆகிய இருவரும் ‘இயல்வது கரவேல்’படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்போது கதாநாயகன் ஆகியிருக்கும் மாஸ்டர் மகேந்திரன், இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இவரைப்போல் குழந்தை நட்சத்திரமாக இருந்த யுவலட்சுமியும், இதில் கதாநாயகியாக நடிக்கிறார். கதிர், மகேந்திரன் இருவரும் நிஜவாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். திரையில் எதிரிகளாக நடிக்கிறார்கள்.
‘‘எப்போதுமே இதுபோன்ற கதைகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும். அந்த வகையில், ‘இயல்வது கரவேல்’ படமும் ரசிகர்கள் மத்தியில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்’’ என்கிறார், படத்தின் டைரக்டர் ஹென்றி.
Related Tags :
Next Story