வெப் தொடர் வெற்றியால் 50 மடங்கு உயர்ந்த நடிகரின் சம்பளம்


வெப் தொடர் வெற்றியால் 50 மடங்கு உயர்ந்த நடிகரின் சம்பளம்
x
தினத்தந்தி 3 May 2022 3:11 PM IST (Updated: 3 May 2022 3:11 PM IST)
t-max-icont-min-icon

வெப் தொடர் வெற்றியால் நடிகர் ஜெய்தீப் அலாவத் சம்பளம் ஐம்பது மடங்கு அதிகரித்துள்ளது.

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு வெப் தொடர் வெற்றியால் நடிகர் ஒருவரின் சம்பளம் 50 மடங்கு உயர்ந்து, திரையுலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த அதிர்ஷ்டகார நடிகரின் பெயர் ஜெய்தீப் அலாவத். இவர் தமிழில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

ஓ.டி.டி. தளத்தில் வெளியான பாதல் லோக் என்ற வெப் தொடரில் நடிக்க, ஜெய்தீப் ரூ.40 லட்சம் சம்பளமாக பெற்றார். இந்த தொடர் பெரிய வெற்றி பெற்றது. தொடரின் வெற்றிக்கு ஜெய்தீப் ஏற்று நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரமே காரணம் என்று பலரும் பேசினர். தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் நடிக்க ஜெய்தீப்புக்கு ரூ.20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வெப் தொடரின் வெற்றியால், இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கிடைத்து இருப்பதை பார்த்து ஜெய்தீப் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் இருக்கிறார்.

1 More update

Next Story