'இந்தியன் -2' படப்பிடிப்பில் இணைந்த நடிகர் கமல்ஹாசன்


இந்தியன் -2 படப்பிடிப்பில் இணைந்த நடிகர் கமல்ஹாசன்
x

இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.அதன்படி 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.இந்த படப்பிடிப்பில் இன்று கமல்ஹாசன் கலந்துகொண்டார்.படப்பிடிப்பு தளத்தில் அவர் இயக்குனர் ஷங்கருடன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Next Story