பகல் நேரங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடாதீர்கள்...! கோரிக்கை வைத்த ரசிகர்...! நடிகை மாளவிகா மோகனின் பதில்
நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளிப்பார்.
சென்னை
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். புதிய படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளிப்பார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர், மக்கள் அதிகம் உள்ள பகல் நேரங்களில் புகைப்படங்களை பதிவிடாதீர்கள். சென்னையின் சாலைகள் பள்ளமாக இருக்கின்றன. நான் ஒரு பெரிய பள்ளத்தில் விழ இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மாளவிகா நான் இதனை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.