ஜிவி பிரகாஷுடன் முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர்


ஜிவி பிரகாஷுடன் முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர்
x

ஜிவி பிரகாஷுடன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் 'டியர்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ளனர். 'டியர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story