அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்


அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்
x

அல்லு அர்ஜுன் நடிக்கும் 23-வது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

சுகுமார் இயக்கிய புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் 2-வது பாகம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 23-வது படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பூஷன் குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, படக்குழு இதனை அறிவித்துள்ளது. தொடர்ந்து படத்தின் பெயர், நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story