மாணவர்கள் மீது தாக்குதல் ஆசிரியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை


மாணவர்கள் மீது தாக்குதல்  ஆசிரியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T16:19:54+05:30)

ஹாசன் டவுனில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஹாசன்:

ஹாசன் டவுன் பென்ஷன் மொகல்லா அருகே ஒனசினகெரே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து தண்டிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் கூறினர். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியருக்கும், பெற்றோர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் தரப்பில் ஆசிரியர்கள் மீது பென்சன் மொகலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஆசிரியர்களை அழைத்த போலீசார், இனி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.


Next Story