பெங்களூரு

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்பீதரில் ‘மக்களின் குரல்’ பிரசாரத்தை தொடங்கி வைத்து பேச்சு

பீதரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மக்களின் குரல் என்ற பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கு தயாரா? என்று பிரதமர் மோடிக்கு அவர் சவால் விடுத்தார்.


மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

மக்களவை முன்னாள் சபாநாயகரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

எனது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம்முதல்-மந்திரி குமாரசாமிக்கு, விவசாயி கடிதம்

வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளது என்றும், எனது கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு, சிக்கமகளூரு விவசாயி கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, சுதந்திர தின விழா முதல்-மந்திரி குமாரசாமி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி நாளை(புதன்கிழமை) தேசிய கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மங்களூரு- மடிகேரி சாலையில் மண் சரிவு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களில் நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது. மங்களூரு-மடிகேரி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் சித்தராமையா பேச்சு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று சித்தராமையா கூறினார்.

சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல்

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி

தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

விமான கண்காட்சியை பெங்களூருவிலேயே நடத்த வேண்டும்

விமான கண்காட்சியை தொடர்ந்து பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு சாவு

துமகூரு அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை முகநூலில் வீடியோவாக வெளியிட்டார்.

மேலும் பெங்களூரு

5

News

8/15/2018 3:17:18 AM

http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore