தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி


தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி
x

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கிய போது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்கான உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறையினரிடம் படக்குழுவினர் முறையாக பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குண்டுவெடுப்பு காட்சி படமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழ்களை படக்குழு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்

நாளை காலை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது


Next Story