'நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது' - கவனம் ஈர்க்கும் 'லக்கி மேன்' டிரைலர்


நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது - கவனம் ஈர்க்கும் லக்கி மேன் டிரைலர்
x
தினத்தந்தி 19 Aug 2023 9:45 AM GMT (Updated: 19 Aug 2023 10:26 AM GMT)

யோகிபாபு நடித்துள்ள 'லக்கி மேன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நல்லவனா இருந்தா கடைசி வரைக்கும் நல்லவனா தான் இருக்கணும், நல்லா இருக்க முடியாது', 'உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story