'சந்திரமுகி-10 வரை எடுத்தாலும் சந்திரமுகியோட பெஸ்ட் பிரண்டு நான் தான்' - வைரலாகும் வடிவேலு வீடியோ


சந்திரமுகி-10 வரை எடுத்தாலும் சந்திரமுகியோட பெஸ்ட் பிரண்டு நான் தான் - வைரலாகும் வடிவேலு வீடியோ
x
தினத்தந்தி 16 Aug 2023 11:57 AM GMT (Updated: 16 Aug 2023 12:15 PM GMT)

வடிவேலுவின் டப்பிங் வீடியோவை 'சந்திரமுகி -2' படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

'சந்திரமுகி' திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி-2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'சந்திரமுகி-2' படக்குழு வடிவேலுவின் டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சந்திரமுகி பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான் என்று வடிவேலு கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story