அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது- வைரமுத்து


அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது-  வைரமுத்து
x

மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்

சென்னை,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அரசியலுக்கு நான் வருவேனா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது" என்று கூறினார்


Next Story