தியேட்டர்களை கோவில் மாதிரி பார்க்கிறேன் - கமல்ஹாசன்


தியேட்டர்களை கோவில் மாதிரி பார்க்கிறேன் -  கமல்ஹாசன்
x

"ஓ.டி.டியில் படங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே வேறு. தியேட்டர்களை கோவில் மாதிரி நான் நினைக்கிறேன்'' என்கிறார் கமல்ஹாசன்.

கேள்வி:- சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தீர்களே? என்ன பேசினீர்கள்?

பதில்:- 40 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். சினிமா, ரசிகர்கள், பொதுமக்கள் இப்படி பல விஷயங்கள் எங்கள் பேச்சில் வரும். இப்போதும் அதைத்தான் பேசிக்கொண்டோம்‌. அரசியல் பேச்சு மட்டும் வராது. ஏனென்றால் வேறு வேறான பிலாசபியை நம்பும் மனிதர்கள் நாங்கள். எல்லாவற்றையும் விட நட்பை அதிகமாக கவுரவிக்கும் நல்ல நண்பர்கள் நாங்கள்.

கேள்வி:- அரசியலையும், சினிமாவையும் எப்படி சமன் செய்கிறீர்கள்?

பதில்:- தென்னிந்திய சினிமாவும், அரசியலும் வேறு வேறு அல்ல. நமக்கு முன்னே இரண்டு துறைகளையும் திறமையாக கையாண்டவர்கள் இருக்கிறார்கள். நானும் அதைத்தான் செய்கிறேன். நான் நிறைய படங்களில் நடிக்கவேண்டுமென ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

கேள்வி:- தற்போது பல மொழிகளில் படங்கள் வெளியாகும் 'பான் இந்தியா டிரண்டு' பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- சினிமாவின் பழைய சரித்திரத்தைப் பார்த்தால் நாகேஸ்வரராவ் நடித்த தேவதாஸ் தெலுங்கு படம் சென்னையில் 3 ஆண்டுகள் ஓடியது. மரோ சரித்ரா தெலுங்கு படம் இரண்டரை ஆண்டுகள் ஓடியது. சங்கராபரணம் கூட அப்படித்தான். சாகர சங்கமம் தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெள்ளி விழா கண்டது. சந்திரலேகா இந்தியாவின் முதல் பான் இந்தியா படம்.

கேள்வி:- ஓ.டி.டி. பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஓ.டி.டியில் படங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே வேறு. தியேட்டர்களை கோவில் மாதிரி நான் நினைக்கிறேன். ஏனென்றால் பக்கத்தில் இருப்பவர் என்ன சாதி என்ன மதம் என்று கண்டுகொள்ளாமல் அனைவரும் சமமாக உட்கார்ந்து படம் பார்ப்பார்கள். இந்தியன்-2 படத்தை இந்த ஆண்டிலேயே முடிக்க முயற்சி செய்கிறோம்.


Next Story