48 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமா? வெளியான வீடியோ!


48 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமா? வெளியான வீடியோ!
x

மும்பை விமான நிலையத்திலிருந்து ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற செய்திகள் உலா வருகின்றன.

மும்பை,

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது தாய்-மகள் இருவரும் கறுப்பு நிறத்தில் உடையணிந்திருந்தனர்.

ஐஸ்வர்யா தளர்வான கறுப்பு உடையிலும், அவரது மகள் ஆராத்யா கறுப்பு டிராக் சூட்டிலும் கைகோர்த்து நடந்தனர். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. படு தளர்வான உடையில் இருந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்து, அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

அவர் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்காகவே அந்த ஓவர்கோட்டை போட்டிருந்ததாக கூறி பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பீரியட் ஆக்ஷன் படம், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் தழுவலாகும். இதில் ஐஸ்வர்யா, பழுவூர் இளவரசி, பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது.


Next Story