உலக அளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர்'


உலக அளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்த ஜெயிலர்
x

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாகி இன்றுடன் 4 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் உலக அளவில் ஜெயிலர் பட வசூல் ரூ.200 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் வார விடுமுறை என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story